பிக் பாஸ் 8 தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்க போகும் பிரமாண்ட சம்பளம்

இன்று விஜய் தொலைக்காட்சியின் தொடங்கவுள்ள பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் 8வது சீசன் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ளது.

Vijay Sethupathi is going to get a huge salary to host Bigg Boss 8

இதுவரை நடந்த 7 சீசன்களை உலகநாயகன் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இம்முறை நிகச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இம்முறை சுனிதா, ரஞ்சித், சீரியல் நடிகர் சத்யா, சீரியல் நடிகை தர்ஷிகா, ரவீந்தர், தொகுப்பாளினி ஜாக்லின், விஜே தீபக் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நடப்பு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.