லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம்
புதிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான படம் லப்பர் பந்து.
இத்திரைப்படம் உள்ளூர் அளவிலான ரப்பர் பந்து கிரிக்கெட்டையும் குடும்பத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
மொத்தமாக ரூ. 8 கோடி பட்ஜெட்டிற்குள் உருவான இத்திரைப்படம் இதுவரை ரூ. 38 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் இத்திரைப்படம் அக்டோபர் 18ம் தேதி சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது திரையரங்கிலேயே லப்பர் பந்து படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகிறது என்றும் பிறகு தேதி அறிவிக்கப்படும் என இப்படத்தை வாங்கிய சிம்பிளி சௌத் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.