இடையனும் காட்டு ஆடுகளும்
ஆடு மேய்ப்பவர் இடையன் ஒருவர் ஒரு கிராமத் தில் வாழ்ந்து வந்தார். அவர் காட்டுக்குள் போய் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அது மழை காலம் என்பதனால் காடடுக்குள் நிறைய உணவு கிடைக்கவில்லை. அதனால் தன்னுடைய வீட்டு விவசாய நிலத்தில் விளைந்த புல்லைப் போட்டு ஆடுகளை சிறிது நாட்கள் வளர்க்கலாம் என்று நினைத்தார். அந்த நேரத்தில் சில காட்டு மந்தைக்ளும் அவருடைய மந்தையில் வந்து கலந்துவிட்டன.
அவைகளுக்கு தன் னுடைய வீட்டில் இருந்த சாப்பாட்டை கொடுத்ததும், அவை அனைத்தும் அங்கேயே தங்கிவிட்டன. செலவு இல்லாமல் நிறைய ஆடுகள் கிடைத்ததனால் அந்த ஆடு மேய்ப் பவருக்கு மிகவும் சந்தோசம் அதனால் புதி க வந்த காட்டு ஆடு களுக்கு நிறைய உண வும், ஏற்கனவே இருந்த ஆடுகளுக்கு உயிர் வாழுகின்ற அளவுக்கு சாப்பாடும் கொடுத்தார்.

மழைகாலம் முடிந்ததும் அந்தக் காட்டு ஆடுகள் தங்களுடைய வாழ்விடமான காட்டுக்குப் போக ஆரம்பித்தது. அதைப் பார்த்த ஆடு மேய்ப்பவருக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. நான் உங்களுக்கு நிறைய சாப்பாடு கொடுத்தும் இப்படி உங்கள் வாழ் விடத்துக்கு போகின்றீர்களே என்று கேட்டார்.அதற்கு அந்த காட்டு ஆடுகள் கூறியது நீங்கள் புதிய ஆடுகள் வந்ததும் பழைய ஆடுகளுக்கு உணவு
கொடுக்காமல் புதிய ஆடுகளுக்கு நிறைய உணவு கொடுத்தீர்கள். நாங்கள் உங்களுடனே தங்கிவிட்டால் பழைய ஆடாக மாறிவிடுவோம். புதிய ஆடு ஏதாவது இங்கே வந்துவிட்டால் எங்களுக்குப் போதுமான உணவு கொடுக்க மாட்டீர்கள். அதனால் நாங்கள் எங்கள் வழியைப் பார்த்து விட்டு போகிறோம் என்று சொல்லி விட்டு காட்டுப் பகுதிக்கு போய் விட்டன. புதிய ஆடுகள் வந்ததும் பழைய ஆடு களுக்கு உணவு சரி யாக கொடுக்காமல் விட்டதைத்து நினைத்து வருத்தப்பட்டார் அவர்.