நமக்குள் இருக்கும் முரண்பாடுகள் – இன்று ஒரு தகவல் – லேனா தமிழ்வாணன்
எண்ணுவது ஒன்று; பேசுவது ஒன்று; செய்வது ஒன்று;
ஒன்றை முதல்நாள் அடியோடு வெறுப்பது; அதையே மறுநாள் ஆசையோடு அடையத் துடிப்பது.
இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாய் இருப்பதில் என்ன பயன்?
இத்தகைய செயல்களால் ஏற்படும் பின்விளை வுகளையும் அவப்பெயரையும் சற்றும் எண்ணிப் பாராமல் தொடர்ந்து இவற்றைக் கடைப்பிடிப்பதால் வரும் கோளாறுகள் மிகப் பயங்கரமானவை.
வருமுன் காக்கும் இயல்பை வளர்த்துக் கொள் ளாமல், வந்தபின் புலம்பும் பட்டியலில் நாமும் சேராதிருக்க வேண்டுமானால்உடனடியாகத் தக்க முயற்சிகள் எடுத்தாக வேண்டும்.
நம்முடைய இத்தகைய இயல்புக்கு என்ன காரணம்? இதை என்றைக்கு மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்று சிந்திக்கத் தொடங்குவது முதல் முயற்சி. இப்படி உணரும் நிலை வந்துவிட்டாலே விடிவுகாலம் விரைவில் வரும்.
நம்முடைய இத்தகைய இயல்புக்கு என்ன காரணம்? இதை என்றைக்கு மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்று சிந்திக்கத் தொடங்குவது முதல் முயற்சி. இப்படி உணரும் நிலை வந்துவிட்டாலே விடிவுகாலம் விரைவில் வரும்.
இக்குறையைக் களைய வேண்டும் என்ற மன உறுதியை அழுத்தமாய் மேற்கொள்ள வேண்டும். அது மேலோட்டமான பாசாங்கு எண்ணமாக இல்லாமல் உண்மையோடும் மனப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். தம்மிடம் இல்லாத சிறப்புகளையும் குணாதி சயங்களையும் ஒருவர் இருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலமும், இருக்கும் குறைகளை இல்லாததுபோல் மூடி மறைப்பதன் மூலமும் தற் காலிகமான பெருமைகளைப் பெறலாம்.
ஆனால், இச்செயல் புறையோடிப்போன புண்ணை ஒரு மருத்துவரிடம் மறைப்பது போல வும், இல்லாத ஒரு வலியை அவரிடம் இருப்பதாகச் சொல்வது போலவும் ஆகும்.
உதட்டளவு வார்த்தைகளால் இல்லாமல் உள்ளத்தளவு வார்த்தைகளாய் நம் பேச்சுக்கள் அமைந்தால் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறையும்.
இல்லாவிட்டால் கேலியும் குழப்பமும் வேதனை யுமே மிஞ்சும். தெளிவற்ற சிந்தனையால் வரும் கோளாறுகள் இவை.
நமக்கென்று சில நம்பிக்கைகள் இருக்கும். ஆனால் தினமும் பெறும் அனுபவத்தின் மூலம் அவை அர்த்தமற்றவையாகவும் தோன்றும்.
இந்நிலையில் நம்பிக்கைகளை மாற்றி அமைத்துக் கொண்டு தெளிவான ஒரு முடிவுக்கு வரத்தான் வேண்டும். முரண்பாடான எண்ணங்களைச் சீர்தூக்கிப் பார்த்துத் தெளிவான முடிவுக்கு வருவது எப்படி? ஒப்பிட்டுப் பார்ப்பது, பகுத்துப் பார்ப்பது, நடு நிலையுடன் ஆராய்வது, மதிப்பிடுவது, ஏற்றுக் கொள்வது, தீர்மானிப்பதுஎன்ற வகையில் சுய அறிவுடன் தேவையான நேரத்தைச் சிந்தனைக் கெனச் செலவழித்தால் நம்மிடமுள்ள முரண்பாடு களை நம்மால் நிச்சயம் களைய முடியும். எண்ணமும் பேச்சும் செயலும் ஒன்றுபடும் போது நம் வெற்றி பன்மடங்காகிறது! உயர்வது எளி தாகிறது!
