கழுதை திருடர்கள்

Donkey Thieves - Children's Stories

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவருடைய விவசாய நிலத்தில் விளைந்த பொருட்களை எல்லாம் சந்தைக்குக் கொண்டு போக ஒரு கழுதை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதனால் சந்தைக்கு போய் ஒரு நல்ல கழுதையை விலை கொடுத்து வாங்கினார். காட்டு வழியாக அவர் தன்னு டைய வீட்டுக்கு நடந்து போகும் போது மூன்று திருடர்கள் அந்த விவசாயியைப் பார்த்தார்கள். அவரிடம் இருந்து அந்தக் கழுதையை எப்படியாவது திருட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்

ஆனால் அந்த நாட்டை ஆண்ட ராஜா மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். திருடர்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய தண்ட னைகளைக் கொடுத்தார். அதை நினைத்த மூன்று திருடர்களும் பயந்தார்கள். இருந்தாலும் திட்டம் போட்டு அந்த விவசாயியை ஏமாற்ற நினைத்தார்கள். அப்போது தான் கழுதை திருட்டு போனதை ராஜாவிடம் போய் அந்த விவசாயி சொல்ல மாட்டார். நமக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைத்தார்கள். வெயில் அதிகமாக இருந்ததால் ஒரு மரத்தடியில் படுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தார் அந்த விவசாயி.

அப்போது ஒரு திருடன் அவர் கூடவே ஓய்வெடுக்கின்ற மாதிரி நடித்தான். அப்படியே விவசாயியிடம் கொஞ்சம் பேச்சும் கொடுத்தான். இந்த காட்டில் மிருகங்கள் மாதிரி உருமாறுகின்ற ராட்சசன் இருக்கின்றானாம். அவனைப் பார்த்தால் எல்லோரும் ஓடி விடுவார்களாம் என்று சொன்னான் அந்தத் திருடன். அதைக் கேட்ட விவசாயி அதை நம்பாமல் சிரித்து விட்டு கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்தார் அந்த விவசாயி.

அப்போது இன்னொரு திருடன் அங்கே வந்து கழுதையைக் கட்டி இருந்த கயிற்றை கழட்டி தன்னுடைய கழுத்தில் மாட்டிக் கொண்டான்.
இன்னொரு திருடன் அந்தக் கழுதையை வேறு பக்கம் இழுத்துக் கொண்டு போய் விட்டான். கொஞ்ச நேரத்திற்குப் பின் தூக்கத்தில் இருந்த விவசாயி அந்தத் திருடனை பார்த்தார். கழுதைக்கு பதிலாக ஒரு மனிதன் இருக்கிறானே என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

உடனே பக்கத்தில் இருந்த திருடன் அடடா இதுதான் அந்த மிருகங்கள் மாதிரி உருமாறு கின்ற ராட்சசன் போல் இருக்கு வாருங்கள் ஓடி விடலாம் என்று சொல்லி விட்டு ஓட ஆரம்பித் தான்.
விவசாயியும் வேறு பக்கம் ஓட ஆரம்பித்தார். விவசாயி போனதற்குப்பின் தங்களின் புத்திசாலித் தனத்தால் விவசாயியை ஏமாற்றிய அந்த மூன்று திருடர் களும் அந்தக் கழுதையை சந்தையில் விற்று வந்த பணத்தை பங்கு பிரித் துக் கொண்டார்கள்.

Comments are closed.